ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

இந்த கூட்டம் போதுமா..? கமுதியில் தனியார் பேருந்து மேற்கூரையில் மாணவர்கள் ஆபத்தான பயணம் - அதிர்ச்சி வீடியோ

இந்த கூட்டம் போதுமா..? கமுதியில் தனியார் பேருந்து மேற்கூரையில் மாணவர்கள் ஆபத்தான பயணம் - அதிர்ச்சி வீடியோ

பேருந்தின் மேற்கூரை வரை மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்துகள்

பேருந்தின் மேற்கூரை வரை மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்துகள்

Ramanathapuram private bus | மாணவ - மாணவிகளின் நலன் கருதி காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

கமுதியில் ஆபத்தான முறையில் அளவுக்கு அதிகமாக மூன்று மடங்கு  பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேருந்துகளை காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தனியார் பேருந்தின் மேற்கூரை மற்றும் ஏணிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மோட்டார் வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறி தொடர்ந்து ஆபத்தான முறையில் பள்ளி மாணவ - மாணவிகளை அரசு,  தனியார் பேருந்துகளில்  ஏற்றிச் செல்லும்நிலை உள்ளது. இவற்றை கட்டுப்படுத்தும்  போக்குவரத்து மோட்டார் வாகன அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் காலை, மாலை வேளைகளில் உரிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தனியார் பேருந்து ஊழியர்களும் டிக்கெட் கலெக்‌ஷன்களுக்காக பேருந்தின் மேற்கூரைகளில் கூட மாணவர்களை அமரவைத்து அழைத்து செல்கின்றனர்.  இந்த நிலையில்  மாணவ - மாணவிகளின் நலன் கருதி காலை மாலை நேரங்களில் இப்பகுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் பெற்றோர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர்: சர்க்கரை முனியசாமி - கமுதி

First published:

Tags: Bus, Local News, Ramanathapuram, School students, Tamil News