ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல், அதனை கண்டறிந்து ஊழியர் 200 மீட்டர் ஓடி வந்து சிகப்பு கொடி காண்பித்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே ஊழியர்களுக்கு பயணிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் பயணிகள் ரயில் 6:45 ராமநாதபுரம் வந்தடையும், இதனை அடுத்து ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் ரயில் கடந்த 17ம் தேதி வழக்கம்போல வந்ததையடுத்தது. ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு வாலாந்தரவை அருகே சென்றபோது, அங்கு தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்த கீமேன் வீரப்பெருமாள் மற்றும் ஊழியர்கள் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ரயில் வருவதை அறிந்த கீமேன் வீரப் பெருமாள் தன் கையில் இருந்த சிவப்பு கொடியை காண்பித்தவாறே சுமார் 200 மீட்டர் நீளம் ஓடி ரயிலை நிறுத்த முயற்சி செய்தார், கையில் சிகப்பு கொடியுடன் வருவதை பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார், இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தக்க நேரத்தில் தன்னுடைய துரித முயற்சியால் ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்த வீரப்பெருமாளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த காதல் ஜோடி கைது
இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்டவாளத்தில் விரிசல் சரி செய்யப்பட்டு மீண்டும் ராமேஸ்வரத்தை நோக்கி பயணிகள் ரயில் கிளம்பியது, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அறிந்த ரயில் பயணிகளும், அப்பகுதி மக்களும் கீமேன் வீர பெருமக்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
செய்தியாளர்: பொ. வீரக்குமரன் -ராமநாதபுரம்
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.