Home /News /ramanathapuram /

ராமநாதபுரம் : நண்பர்களுடன் மது அருந்திய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் தீவிர விசாரணை

ராமநாதபுரம் : நண்பர்களுடன் மது அருந்திய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் தீவிர விசாரணை

இறந்துபோன கல்லூரி மாணவன்

இறந்துபோன கல்லூரி மாணவன்

Ramanathapuram | இராமநாதபுரம் கூரியூர் அருகே  கல்லூரி படிக்கும் மாணவர் தண்டாவாளத்தில் மர்மமான முறையில் இறப்பு. போலீசார் உடலை கைப்பற்றி கொலையா தற்கொலையா என விசாரணையில் போலீசார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    ராமநாதபுரம் மாவட்டம் கூரியூர் கிராமம் உஸ்மான் மகன் செய்யது கான் (20). இவர் ராமநாதபுரம் அருகே தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக பகுதிநேர வேலையாக ராமநாதபுரம்  பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் மாலை 6:00 மணி முதல் 10 மணி வரையும், மீண்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும் அந்த பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இன்று அதிகாலை தண்டவாளத்தில் செய்யது கான் மர்மமான முறையில் இறந்து கிடந்து உள்ளார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நண்பர்களுக்கிடையே மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில்: கூரியூர், பெரியார் நகர், மல்லிகை நகர் உள்ளிட்ட பகுதிகளில் படித்த இளைஞர்கள் கல்லூரி படிக்கும் மாணவர்கள் என இரவு நேரங்களில் மது அருந்தி விட்டும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக செல்ல முடியாத சூழ்நிலையும் உருவாக்கி உருவாகியுள்ளது.பலமுறை காவல்துறையினிடம் புகார் தெரிவித்தும் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த மாணவர் திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும் இந்த மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்கள் செய்திருக்கலாம் எனவும் எங்களுக்கு சந்தேகமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    Also see... மதுகுடிக்க பணம் தராத தாயை கொன்ற மகன் கைது

    மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இந்த மது மற்றும் கஞ்சா எவ்வாறு கிடைக்கிறது என்று ஆய்வு செய்து அவர்களை கண்டிப்பான முறையில் கைது செய்யப்பட வேண்டும் எனவும் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    செய்தியாளர்: பொ. வீரக்குமரன்,இராமநாதபுரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: College student, Crime News, Death, Ramanathapuram

    அடுத்த செய்தி