ராமநாதபுரம் அருகே காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்தில் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய பச்சிளம் குழந்தை,தாய் உள்ளிட்ட 4பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியை சேர்ந்த மீனவர் சேதுராஜா என்பவர் தனது மகள் சுமதியை திண்டுக்கல் மாவட்டஜ்ம் நத்தம் பகுதியை சேர்ந்த சின்னகடையான் என்பவருக்கு திருமணம் முடித்துள்ளார். தலை பிரவத்திற்காக சொந்த ஊரான வேதாளைக்கு வந்து அரசு மருத்துவ மனையில் சுமதி சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த வாரம் பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த 17ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவர்கள் இன்று வீட்டிற்கு செல்லலாம் என கூறியதை தொடர்ந்து ஆட்டோவில் சுமதி, அவரது குழந்தை மற்றும் கணவர் சின்னக்கடையான், தாய் காளியம்மாள் ஆகிய நான்கு பேரும் ஆட்டோவில் வேதாளை நோக்கி சென்றனர். இராமநாதபுரம்-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே சென்னையிலிருந்து இராமேஸ்வரம் சென்று திரும்பிய கார் ஒன்று ஆட்டோமீது மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லும் வழியிலேயே, குழந்தையின் தாய் சுமதி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தையின் தந்தை சின்ன அடைக்கான் ஆகிய இருவரும் மரணமடைந்தனர். ஆட்டோவில் சென்ற 4 பேரும் உயிரிழந்த நிலையில், காரில் பயணித்த 4 பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: பொ. வீரக்குமரன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Local News, Ramanathapuram