ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலைய பகுதியில் நாளை (09-12-2022) பாரமரிப்பு பணிகள் நடப்பதால் இந்த பகுதியில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.

Must Read : சாபங்கள் நீங்க குமரியில் வழிபடவேண்டிய குகநாதீஸ்வரர் கோவில் - முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்

மின் தடை பகுதிகள்:

முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, பொம்மக்கோட்டை, காளையாா் கரிசல்குளம், கத்தாளம்பட்டி, ம. ரெட்டியபட்டி, மண்டபம் சாலை, பூலாங்கால், வடக்கு நத்தம், உலக்குடி, இருஞ்சிறை, நாலூா், செட்டிக்குளம், தும்முசின்னம்பட்டிட், ராஜகோபாலபுரம், தொப்பலாக்கரை, நல்லாங்குளம், குள்ளம்பட்டி, சவ்வாசுபுரம், வீரசோழன், சேதுபுரம், மேலையூா், ஆண்டியேந்தல், நல்லுக்குறிச்சி, கல்லுமடம், கல்லூரணி மற்றும் ஆலடிப்பட்டி.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Ramanathapuram