Home /News /ramanathapuram /

அதிமுக தலைமை ஏற்க இருக்கும் எடப்பாடியாரே.. பரமக்குடியில் ஒட்டப்பட்ட போஸ்டரில் பரபரப்பு

அதிமுக தலைமை ஏற்க இருக்கும் எடப்பாடியாரே.. பரமக்குடியில் ஒட்டப்பட்ட போஸ்டரில் பரபரப்பு

இபிஎஸ்-க்கு ஆதரவாக பரமக்குடியில் போஸ்டர்

இபிஎஸ்-க்கு ஆதரவாக பரமக்குடியில் போஸ்டர்

Ramanathapuram : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் ஆதரவாக ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ‘அதிமுகவின் ஒற்றை தலைமை ஏற்க இருக்கும் அண்ணன் எடப்பாடியாரே’ என அதிமுக நிர்வாகிகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது.‌ தொடர்ந்து 5ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்துவருகிறார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்துவருகிறார்.

    இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ‘ஒற்றைத் தலைமை’யின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். நேற்று அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் ஒற்றைத் தலைமை ஏற்குமாறு மாறி மாறி கோஷங்களை எழுப்பினர்.

    அதனைத் தொடர்ந்து இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், இபிஎஸ்க்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு  ஆதரவாக ‘ஒற்றை தலைமை ஏற்க வா’ என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் பரமக்குடி பேருந்து நிலையம், தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில், பரமக்குடி நகர் கழகம் சார்பில் ‘ஒற்றை தலைமை ஏற்க இருக்கும் எடப்பாடியாரை  வரவேற்கிறோம்’ என கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    இபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்


    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் ஆதரவாக ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Must Read : 200க்கும் மேற்பட்ட பைக் திருட்டு.. பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய ‘பலே’ பல்சர் திருடன் கைது

    இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதேபோல, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவருடைய ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்- கு.தமிழ்ச்செல்வன், பரமக்குடி
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami, EPS, OPS, Ramanathapuram

    அடுத்த செய்தி