ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக நகர அவை தலைவராகவும் நகர்மன்ற உறுப்பினராகவும் இருப்பவர் சிகாமணி. இவர் ஜி.எஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பரமக்குடி பேருந்து நிலையம் அருகே களஞ்சியம் என்ற பெயரில் ரெடிமேட் கடை நடத்தி வருபவர் ராஜா முகமது.
சிகாமணி, ராஜா முகமது மற்றும் பரமக்குடியை சேர்ந்த பிரபாகரன் ஆகிய 3 பேரும் நண்பர்கள். சிகாமணி உட்பட 3 பேருக்கும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தும் கயல்விழி, உமா ஆகியோரின் தொடர்பு கிடைத்துள்ளது. இதனிடையே பள்ளியில் படித்து கொண்டிருக்கும் 8ம் வகுப்பு மாணவியை பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்துள்ளார் கயல்விழி. மாணவியை சிகாமணி, ராஜா முகமது, பிரபாகரன் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் 5 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்துள்ளனர்.
மாணவி மூலம் கிடைத்த பணத்தை பங்கிடுவதில் 5 பேருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பள்ளி மாணவி விவகாரம் அம்பலமாகி இருக்கிறது. ஆடியோ வெளியான நிலையில் மாணவியின் பெற்றோர் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். தங்களது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாகவும், ஆடியோ வெளியான பிறகே எங்களுக்கு விவரம் தெரியும் என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் சிகாமணி, ராஜா முகமது, பிரபாகரன், கயல்விழி, உமா ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர். 5 பேர் மீதும் போக்சோ பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல முக்கிய புள்ளிகளும் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்யும் முடிவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 மாதமாக அவரை பள்ளிக்கு செல்ல விடாமல் பாலியல் கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை ராமநாபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : பொ. வீரக்குமரன் (ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Ramanathapuram, Sexual abuse