ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

தேவர் ஜெயந்தி.. பசும்பொன்னில் அமைச்சர்கள் மரியாதை..! பலத்த போலீஸ் பாதுகாப்பு!

தேவர் ஜெயந்தி.. பசும்பொன்னில் அமைச்சர்கள் மரியாதை..! பலத்த போலீஸ் பாதுகாப்பு!

தேவர் ஜெயந்தி

தேவர் ஜெயந்தி

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை நடைபெறுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram | Ramanathapuram | Kamuthi | Tamil Nadu

  பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28-ம் தேதி 29 மற்றும் 30 தேதி என 3 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படும்.

  அதன் படி, இந்த ஆண்டும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, ராமச்சந்திரன், மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பசும்பொன் வரவில்லை.

  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முன்பு கலைஞர் மரியாதை செலுத்தினார். பின்பு ஸ்டாலின் மரியாதை செய்தார் இன்று உடல்நிலை காரணமாக வர இயலவில்லை, அரசின் சார்பில் மூத்த அமைச்சர்கள் சார்பில் மரியாதை செலுத்தினோம். அப்போது "மண்ணுக்குள் மாணிக்கம்" என்று அண்ணா சொன்னதைப்போல பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் முத்துராமலிங்க தேவர். அவர் சொன்னதைப் போல இன்று பல மாணிக்கங்கள் அரசியலிலும் வாழ்விலும் ஜொலித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Duraimurugan, Muthuramalinga Thevar, Thevar Jayanthi