ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் தில்லைநாயகபுரம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மும்தாஜ் என்ற திருநங்கை சொந்தமாக வீடு கட்டினார். இந்த வீட்டில் சுமார் 15 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தங்களது பகுதியில் மணலில் முத்துமாரியம்மன் ஆலயம் அமைத்து, முளைப்பாரித் திருவிழா கொண்டாட முடிவு செய்தனர்.
அதன்படி முதலாம் ஆண்டாக முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டி விரதம் இருந்து வருகின்றனர். தினமும் ஆலயம் முன்பு கும்மி கொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் மாடக்கொட்டான் பகுதியிலிருந்து 2 கி.மீட்டர் தூரம் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் சென்னை, பெங்களூர், கோவை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். அப்போது முளைப்பாரிகளை ஊர்வலமாக சுமந்து முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று, சிறப்பு பூஜை செய்தனர். இந்த முளைப்பாரி விழாவில் அப்பகுதி கிராம மக்களும் பொதுமக்களும் வெகுவாக வந்து கலந்து கொண்டனர்.
மேலும் வந்திருந்த பக்தர்களுக்கு இரண்டு நாட்கள் அன்னதானங்களும் வழங்கப்பட்டன. விழாவின் நோக்கம் குறித்து திருநங்கைகள் கூறுகையில்,” நாங்கள் ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் திருநங்கைகளாக படைக்கப்பட்டது நாங்கள் செய்த தவறல்ல. இறைவன் எங்களுக்குள் இருக்கின்றான். ஏனென்றால் அர்த்தநாரீஸ்வரர் உருவில் தான் நாங்கள் இருக்கின்றோம்.
ஆனால் இந்த சமூகமும், மக்களும் எங்களை ஒதுக்கி வைப்பது வேதனை அளிக்கிறது. நாங்கள் இவ்விழாவை நடத்துவதற்கு நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல், நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து நலமுற வாழ வேண்டும். எனவே நாங்கள் ராமநாதபுரத்தில் முதல்முறையாக முளைப்பாரி விழாவை நடத்தி உள்ளோம்.
Also see...கர்ப்ப காலத்தில் பாலியல் உறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா..?
கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விதமான பாரம்பரிய கலைகளுடன் திருநங்கைகள் பல்வேறு அபிஷேக ஆராதனை உடன் முத்துமாரி அம்மனுக்கு முதன்முறையாக மூலக்கட்டு திருவிழாவை கோலகாலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்
செய்தியாளர்: பொ. வீரக்குமரன்,ராமநாதபுரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ramanathapuram, Transgender