ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

பரமக்குடியில் நீண்ட வரிசையில் நின்று பூஸ்டர்டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட போலீசார்!!

பரமக்குடியில் நீண்ட வரிசையில் நின்று பூஸ்டர்டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட போலீசார்!!

 பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட போலீஸார்

 பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட போலீஸார்

Paramakudi : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 250க்கும் மேற்பட்ட போலீசார் நீண்ட வரிசையில் நின்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரியும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் ஆனவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த சிறப்பு முகாம்களில் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை பூஸ்டர் டோசாக செலுத்த வகை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

அதன்படி, ‘கோவிட் தடுப்பூசி அமுத பெருவிழா’ என்று ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரையில் 75 நாள் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அரசு பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிறப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

Must Read : கரைபுரண்டு ஓடும் காவிரி - பரமத்தி வேலூரில் வீடுகள், விளை நிலங்களில் புகுந்த வெள்ளம் (படங்கள்)

போலீசார்

இந்த முகாமை டிஎஸ்பி திருமலை துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பரமக்குடி டிவிஷனில் உள்ள சத்திரக்குடி, நயினார் கோயில், பார்த்திபனூர், பரமக்குடி, எமனேஸ்வரம் கோட்டத்தில் பணியாற்றும் 250க்கும் மேற்பட்ட போலீஸார்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதேபோல பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று, காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன்.

First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Police, Ramanathapuram, Vaccination