முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / அடுத்த 15 நாட்களில் 500 மருத்துவமனைகள் திறப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

அடுத்த 15 நாட்களில் 500 மருத்துவமனைகள் திறப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

MINISTER MA.SUBRAMANIAN | ராமநாதபுரத்தில் துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழ்நாடு முழுவதும் அடுத்த 15 நாட்களில் 500 மருத்துவமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை மீனவ கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓரிக்கோட்டை, கீழக்கரை உட்பட 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இன்று ஒரே நாளில் 14 மருத்துவமனைகள் திறக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் அடுத்த 15 நாட்களுக்குள் 500 மருத்துவமனைகளை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி முடிவதற்குள் மாணவர்கள் மருத்துவர்களாகி விடுவார்கள் என்றார்.

செய்தியாளர்: பொ. வீரக்குமரன், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ma subramanian, Minister, Ramanathapuram