ஹோம் /நியூஸ் /Ramanathapuram /

சுற்றுலா விசாவில் வந்து பாதிக்கப்படும் தமிழக தொழிலாளர்கள் - மலேசிய அமைச்சர் கோரிக்கை

சுற்றுலா விசாவில் வந்து பாதிக்கப்படும் தமிழக தொழிலாளர்கள் - மலேசிய அமைச்சர் கோரிக்கை

டத்தோ எம்.சரவணன்

டத்தோ எம்.சரவணன்

Ramanathapuram : மலேசியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் உள்ளனர் என அந்நாட்டு அமைச்சர் டத்தோ எம்.சரவணன் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, மலேசிய நாட்டு மனித வள அமைச்சர் டத்தோ எம்.சரவணன் மலேசியாவிற்கு வரும் தமிழக தொழிலாளர்கள் முறையான விசா உள்ளிட்ட ஆவணங்களுடன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலேசிய தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் சார்பில் மலேசியா நாட்டு மனிதவள அமைச்சர் டத்தோ எம்.சரவணனுக்கு ராமநாதபுரம் தனியார் மஹாலில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மலேசியா அமைச்சர் எம்.சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழர்கள் காலம் காலமாக 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொழில் ரீதியாகவும், தொழிலாளர்களாகவும் மலேசியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இங்கு வந்த நிறைய பேர் நல்ல முறையில் உள்ளனர்.

  அண்மைக்காலங்களில் குறைந்த அளவில் தமிழக தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது வெளியில் தெரிகிறது. அவர்களது பிரச்சினைகளை தீர்க்க மலேசியா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது புதிய சட்டத்தின்படி அங்கு வரும் தொழிலாளர்களுக்கு, அவர்களை பணியமர்த்தும் முதலாளிகள் தங்கும் வசதியை செய்து கொடுக்க வேண்டும். அதை அரசு அதிகாரிகளும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  அதேபோல் அவர்களுக்கு  உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்படுகிறதா எனவும் கண்காணிக்கப்படுகிறது. அப்படி சம்பளம் வழங்கவில்லை என்றால், அந்நிறுவனம் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். அந்நியத் தொழிலாளர்களின் நலன் பேணும் அரசாங்கமாக மலேசிய அரசு உள்ளது.

  மலேசியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகத்திலிருந்து முறையான ஆவணங்கள் இன்றி, சுற்றுலா விசாவில் வருகின்றனர். இப்படி வருபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது மலேசியா அரசு எதிர்நோக்கும் பிரச்சினையாக உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எனவே முறையான விசா உள்ளிட்ட ஆவணங்களுடன் வர வேண்டும். முறையான ஆவணங்களின்றி சிறையில் உள்ளவர்கள் கருணையின் அடிப்படையில் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

  Must Read : ஓ.பி.எஸ் மீது பாட்டில் வீச்சு: நிரந்தர அவைத் தலைவர் - அ.தி.மு.க பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வுகள்

  கொரோனா தொற்றை கடந்து, மலேசியாவில் பொருளாதாரம் நன்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் தற்போது 14 நாடுகளில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வரவழைக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

  செய்தியாளர் - பொ. வீரக்குமரன், ராமநாதபுரம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Malaysia, Migrant workers, Ramanathapuram