ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

கார்த்திகை அமாவாசை.. ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்... அக்னி தீர்த்தக் கரையில் புனித நீராடல்!

கார்த்திகை அமாவாசை.. ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்... அக்னி தீர்த்தக் கரையில் புனித நீராடல்!

கார்த்திகை அமாவாசை - ராமேஸ்வரம்

கார்த்திகை அமாவாசை - ராமேஸ்வரம்

கார்த்திகை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் புனித தீர்த்தம் ஆடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Rameswaram, India

  உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை அமாவாசையான இன்று பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் அக்னி தீர்த்தக்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் நின்று ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

  மேலும் ஐயப்பன் சீசன் என்பதால் ஐயப்பன் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெருசில் அதிகமாக காணப்படுவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

  Also see...கார்த்திகை தீபம்.. 6 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு லீவு

  மேலும் இங்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் கழிப்பிடம் வசதிகளை நகராட்சி அமைப்பினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Rameshwaram