முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. போக்சோவில் கைதான கிளார்க்...

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. போக்சோவில் கைதான கிளார்க்...

பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் போக்சோவில் கைது.

பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் போக்சோவில் கைது.

தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிளார்க் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக 11ம் வகுப்பு மாணவி அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரிகள் கிளர்க்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்டம் இளங்குன்றம் பகுதியை சேர்ந்த சுகவனம் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கு படிக்கும் 11ம் வகுப்பு மாணவி கிளார்க் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மாணவி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ADSP உண்ணிகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், திருவாடானை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அனிதா ராணி, தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் பள்ளியில் வைத்து மாணவி மற்றும் கிளார்க்கிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் கிளார்க் சுகவனத்தை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவாடானை உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Also see... உணவுப் பொருட்கள் மீதான ஜி எஸ் டி வரிக்கு விக்ரம ராஜா எதிர்ப்பு...

கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட மாணவி மரணத்தை தொடர்ந்து தொண்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த இசம்பவம் தொண்டி முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: பொ. வீரக்குமரன், ராமநாதபுரம் 

First published:

Tags: Pocso, Ramanathapuram, Sexual harrasment