முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்..

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்..

அதிக எடை கொண திருக்கை மீன்

அதிக எடை கொண திருக்கை மீன்

ராமேஸ்வரம் மீனவர்களின் வலையில் ஒன்றரை டன் எடை கொண்ட ராட்சத பெண் திருக்கை மீன் சிக்கியது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Rameswaram, India

பாம்பனை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களது வலையில் ராட்சத பெண் திருக்கை மீன் சிக்கியது. அதிக எடை இருந்ததால், மற்றொரு நாட்டுப்படகு வரவழைக்கப்பட்டு, திருக்கை மீன் கரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த மீன் 50,000 ரூபாய்க்கு விலை போனது. ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பாம்பன் மீனவர்கள் வலையில், ராட்சத ஆண் திருக்கை மீன் சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மீனவர்கள் கூறியபோது, “ ராமேசுவரம் கடல் பகுதியில் திருக்கை, முள்ளந்திருக்கை, குருவித் திருக்கை, சோனகத் திருக்கை, ஆடாத் திருக்கை, புலியன் திருக்கை, கருவா திருக்கை, பூவாத் திருக்கை, மணற் திருக்கை, வவ்வால் திருக்கை” உள்ளிட்ட திருக்கை வகை மீன்கள் உள்ளன என்றனர்.

Also see...அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் திறப்பு...

இது பற்றி நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் கூறும் போது, "அதிக எடையில் பெண் திருக்கை மீன் சிக்குவது அரிதுதான். அதுவும் தற்போது சிக்கிய இந்த திருக்கை மீன் சுமார் ஒரு டன் எடை இருக்கும். அதிக எடை இருந்தாலும் இந்த மீனுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 1 கிலோ ரூ.50-க்கு வரை மட்டுமே விலை போகும்" என்றார்.

First published:

Tags: Fish, Fisherman, Rameshwaram