மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள போட்டி தேர்வுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாகவும், அது குறித்த விவரங்களையும் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்.
மத்திய பணியாளர் தேர்வாணைமானது, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கீழ்நிலை பிரிவு எழுத்தர், அஞ்சல் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், இளநிலை செயலக உதவியாளர், போன்ற பல்வேறு நிலைகளில் 4,500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 04.01.2023 ஆகும். இது குறித்து கூடுதல் விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், இந்த போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 16ஆம் தேதி தேதி தொடங்கப்பட இருக்கிறது.
Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்த விவரங்களோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 9487375737 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.