ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

இராமநாதபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது...

இராமநாதபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது...

காவல் நிலையம்

காவல் நிலையம்

Ramanathapuram | சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணுக்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  ராமநாதபுரம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் புதுவலசையை பகுதியை சேர்ந்த இளம் பெண் ராமநாதபுரம் பாரதி நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

  சிகிச்சைக்கு சென்ற அந்த இளம்பெண்ணிடம் மருத்துவர் ஜபருல்லா கான் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவர் ஜபருல்லா கான் மீது புகார் அளித்தார்.

  இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் ஜபருல்லா கான் மீது பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மருத்துவர்  அவரை கைது செய்தனர்.

  செய்தியாளர்:பொ. வீரக்குமரன்,இராமநாதபுரம் 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Crime News, Doctor, Ramanathapuram, Sexual harassment