ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 ஆம் தேதி எங்கெல்லாம் மின் தடை தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 ஆம் தேதி எங்கெல்லாம் மின் தடை தெரியுமா?

மின் தடை

மின் தடை

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் KV மண்டபம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (15-12-2022) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

மின்தடை ஏற்படும் இடங்கள்:

.அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Ramanathapuram