ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

மண்ணில் புதைந்த நகரம் தனுஷ்கோடி.. புயலின் கோரத்தாண்டவம் நிகழ்ந்து இன்று 58-வது ஆண்டு

மண்ணில் புதைந்த நகரம் தனுஷ்கோடி.. புயலின் கோரத்தாண்டவம் நிகழ்ந்து இன்று 58-வது ஆண்டு

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

Dhanushkodi : மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

1964 தனுஷ்கோடி புயல் (1964 Dhanushkodi cyclone) இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்குப் பகுதியையும் 1964 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 25 வரை தாக்கியது. 1,800-கும் அதிகமானோர் உயிரிழந்தனர்

ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருப்பது தான் தனுஷ்கோடி 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட மீனவ நகரம். மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது சுனாமி போன்ற ராட்சத அலை எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர்.

இந்த அலை 40 முதல் 50 அடி உயரத்துக்கு எழும்பி வந்தது.

அதிகாலை 3 மணி அளவில் ஆழிப் பேரலை தனுஷ்கோடிக்குள் புகுந்து, நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடி மக்களில் 300-க்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்தனர். இந்திய பெருநிலத்துக்கும் இராமேசுவரம் தீவிற்கும் இடைப்பட்ட பாம்பன்  ரயில் பாலம் பேரலையில் உடைந்தது. மேலும் இரவு 10:55-க்கு முன் பாம்பன் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்ட பாம்பன்-தனுஷ்கோடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் (passenger)  தனுஷ்கோடி தரிப்பிடத்தின் நுழைவாயிலை அடைகையில் ஒரு பேரலையால் அடித்துக் கவிழ்க்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளும் உயிர்மாண்டனர்.

இதையும் படிங்க:  11 நாட்களுக்கு சிரிப்புக்கு தடை.. சத்தம்போட்டு அழவும் கூடாது - அதிரடி உத்தரவிட்ட வடகொரிய அரசு!

தனுஷ்கோடிக்கும் இலங்கைக்கும் கடல் வழியாக கப்பல் போக்குவரத்து அன்றைய காலகட்டத்தில் இருந்து வந்தது. தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு  வர்த்தக ரீதியான கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்தது இந்தப் புயலுக்கு பிறகு அது தடைப்பட்டது. தற்போதும் இந்தப் புயலில் அடித்து செல்லப்பட்ட  போர்ட் மெயில் எனப்படும் ரயில் இன்னும் அதே பெயரில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு ராமேஸ்வரம் மெயில் என்று நினைவுச் சின்னமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தனுஷ்கோடி

தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன.

தனுஷ்கோடி நகரம் புதிப்பிக்கப்படவில்லை. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த புயல் இலங்கையும் விட்டு வைக்கவில்லை 1964 டிசம்பர் 22 இல் இலங்கையின் வடக்குப் பகுதியைத் தாக்கியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏறத்தாழ 5000 வீடுகளும் 700 மீன்பிடி வள்ளங்களும் அழிந்தன பல நெல் வயல்கள் பாதிப்புக்குள்ளாயின மன்னாரிலும் பெரும் சேதம் ஏற்பட்டது திருக்கோணமலைத் துறைமுகமும் சேதமடைந்தது இவ்வழிவுகளினால் 200 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. 350 மீனவர்கள் கடலில் காணாமல் போயினர்.

செய்தியாளர் : குமரன் ( ராமேஸ்வரம்)

First published:

Tags: Dhanushkodi, Local News, Rameshwaram, Tamil News