Home /News /ramanathapuram /

திமுக வெற்றி பெற்றதற்கு நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்.. இழப்பீடு வழங்கிய எம்.எல்.ஏ.

திமுக வெற்றி பெற்றதற்கு நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்.. இழப்பீடு வழங்கிய எம்.எல்.ஏ.

இழப்பீடு வழங்கிய எம்.எல்.ஏ.

இழப்பீடு வழங்கிய எம்.எல்.ஏ.

Ramanathapuram : திமுக வெற்றி பெற்றதற்காக பரமக்குடியில் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய வனிதாவை நேரில் சந்தித்து ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கினர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக வேண்டிக் கொண்டபடி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே முத்தாலம்மன் கோவிலில் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்ணிற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் நிவாரணம் வழங்கினர்.

பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா ( வயது32). இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து கோவில் உண்டியலில் போடுவதாக நேர்ந்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக வெற்றி பெற்ற மே 3ஆம் தேதி பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை பிளேடால் அறுத்து  உண்டியலில் போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் கல்விச் செலவிற்கு உதவ வேண்டும் என முதல்வருக்கு வனிதா கடிதம் எழுதி இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் நேற்று வனிதாவை நேரில் சந்தித்து ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கினார்கள்.

Must Read : ஒற்றைத் தலைமை விவகாரம்.. எனது நிலைப்பாடு இதுதான்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேதுகருணாநிதி, ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் - கு.தமிழ்ச்செல்வன், பரமக்குடி
Published by:Suresh V
First published:

Tags: DMK, Ramanathapuram, Tongue

அடுத்த செய்தி