Home /News /ramanathapuram /

ராமநாதபுரம் பிரபல பேக்கரியில் செஸ் போர்டு கேக் வடிவமைப்பு...

ராமநாதபுரம் பிரபல பேக்கரியில் செஸ் போர்டு கேக் வடிவமைப்பு...

செஸ் போர்டு கேக் வடிவமைப்பு

செஸ் போர்டு கேக் வடிவமைப்பு

Ramanathapuram | ராமநாதபுரம் பிரபல பேக்கரியில் செஸ் ஒலிம்பியாட்டை கௌரவிக்கும் வகையில் செஸ் போர்டு கேக் வடிவமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் பிரபல ஐஸ்வர்யா நிறுவனங்களின் பீமாஸ் பேக்கரியில் கடந்த பல வருடங்களாக இந்திய அளவில் விளையாட்டுகள், தமிழக அளவில் நிகழ்ச்சிகள், மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற நிகழ்வுகளை கேக்காக செய்து வைப்பார்கள்.

    அதுபோல சிலரை கௌரவிக்கும் வகையில் ஆளுயுர அப்துல்கலாம், ஆளுயுர மாரடோனா உருவங்களை பல்வேறு கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமாக தத்ரூபமாக கேக் வடிவமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதும் வழக்கம்.

    இந்நிலையில் நிறுவனர் வெங்கட சுப்பு, பொறுப்பாளர் சதீஷ் ஆகியோர் ஆலோசனைப்படி செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருவதை முன்னிட்டு, அதனை கவுரவிக்கும் வகையில் செஸ் போர்டு மற்றும் ராஜா, ராணி, மற்றும் வீரர்கள்  உள்ளிட்டவற்றை தத்ரூபமாக கேக்காக வடிவமைத்து தங்கள் பேக்கரியில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.

    Also see... Also see... தொண்டியில் ஸ்ரீ பாகம்பிரியாள் திருக்கோயிலில் நடந்த 1008 விளக்கு பூஜை..

    இதனை தங்கள் பேக்கரிக்கு வரும் பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்து செல்வதாக கேக் தயாரிப்பாளர் கார்த்திக் தெரிவித்தார்.

    செய்தியாளர்: பொ. வீரக்குமரன்,ராமநாதபுரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cake, Chess Olympiad 2022, Ramanathapuram

    அடுத்த செய்தி