முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / ராமநாதபுரம் : விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம்

ராமநாதபுரம் : விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம்

மூலை சாவு அடைந்த ராஜேந்திர பிரசாத்

மூலை சாவு அடைந்த ராஜேந்திர பிரசாத்

Organ Donation | உயிரிழந்த ராஜேந்திர பிரசாத்தின் இருதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்பு 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணங்கத்தான் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் ராஜேந்திர பிரசாத் (31). இவர் கடந்த ஜனவரி 15 தேதி பட்டணம் காத்தான் புறவழிச்சாலை பகுதியிலிருந்து இருசக்கர மோட்டாரில் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக சென்றபோது நிலை தடுமாறி  கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியினர் மீட்டு அவரது சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து  ராஜேந்திர பிரசாத்தின் சகோதரி அவரது உடல் உறுப்புகளை கட்டணம் இல்லாமல் தானமாக வழங்க சம்மந்தம் தெரிவித்தார். இதனால் உயிரிழந்த ராஜேந்திர பிரசாத்தின் இருதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்யப்பட்டது. ராஜேந்திர பிரசாத்துக்கு தாய், தந்தை இல்லாத நிலையில் சகோதரி அரவணைப்பில் வளர்ந்துள்ளார்.  இவரின் உடல் ராமநாதபுரம் அள்ளி கம்மாய் சுடுகாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து பேசிய ராஜேந்திர பிரசாத்தின் மைத்துனர், இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தயவுசெய்து தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். எனது பாசமான மாப்பிள்ளையை இழந்தது போல் உங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் இழக்காமல் இருக்க பாதுகாப்போடு பயணம் செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

செய்தியாளர்: பொ. வீரக்குமரன்

First published:

Tags: Local News, Ramanathapuram, Tamil News