ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும். இந்த தீர்ப்புக்கு பிறகாவது அதிமுக நிர்வாகிகள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி எப்போதும் போல பலத்துடன் திகழ வேண்டும். இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவோடு குறைந்தபட்ச சமரசத்திற்கு கூட தயாராக இல்லை என்று கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, இவரிடம் சமரசத்திற்கு வாங்க என்று யார் கேட்டது. திமுகவை பாஜக ஒன்றும் சமரசத்திற்கு அழைக்கவில்லை நாங்கள் திமுகவோடு சமரசத்திற்கு செல்லவில்லை. இதே போல ஆட்சி நிலை நீடித்தால் விரைவில் திமுக ஆட்சி போய்விடும் இவ்வாறு கூறினார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் படித்தபோது உயிரிழந்த விவகாரம் மிகப் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து, அப்போது மத்திய அமைச்சராக இருந்த நான், அவரது உடலை மீட்டு சேலத்தில் ஒப்படைத்துவிட்டு திரும்பியபோது என் மீதும் செருப்பு வீசப்பட்டது. எனது காரிலும் தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது. திராவிட முன்னேற்ற கழகம் அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா, அதற்காக, செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன், அது சரியானது அல்ல.
ஆனால் மந்திரி மீதே வீசி இருக்கிறார்கள் என்று சொன்னால் அன்று நானும் மந்திரியாக இருந்த போது தான் என் மீது வீசப்பட்டது, அன்று எத்தனை பேர் வந்து கண்டனம் தெரிவித்தனர். அப்போது அதனை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஒரு ஆவேசத்தில் சில மக்கள் இருக்கும் போது அதனை பெரிய மனதோடு விலகிச் செல்ல வேண்டும். அதற்காக செருப்பு வீசுவது புதுசு போன்றும், 'உங்கள் மீது வீசினால் செருப்பு எங்கள் மீது வீசினால் மாலை' என்று சொல்லக்கூடாது. மந்திரி மீது மட்டுமில்ல, சாதாரண மனிதன் யார் மீதும் செருப்பை வீசக்கூடாது என தெரிவித்தார்.
செய்தியாளர் : பொ. வீரக்குமரன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK, BJP, Edappadi Palanisami, Madras High court, O Panneerselvam, Pon Radhakrishnan