எனக்கும் எனது கட்சி நிர்வாகிகளுக்கும் உயிர் சேதம் ஏற்பட்டால் தமிழக முதல்வர்தான் பொறுப்பு: பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்
எனக்கும் எனது கட்சி நிர்வாகிகளுக்கும் உயிர் சேதம் ஏற்பட்டால் தமிழக முதல்வர்தான் பொறுப்பு: பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹீம்
தமிழகத்தில் முழுமையாக சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது, எனக்கும் எனது கட்சி நிர்வாகிகளுக்கும் உயிர் சேதம் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு தமிழக முதல்வர் என ராமநாதபுரத்தில் பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கிக் கூறுவதற்காக தமிழகம் முழுவதும் பாஜக மாநில சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார், இந்நிலையில் இளையாங்குடி பகுதியில் விளக்க உரை நிகழ்த்தி விட்டு ஒரு தனியார் டீக்கடையில் டீ அருந்த சென்றபோது, அங்கு தீடீரென 50க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் வந்த வாகனம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வாகனங்களை அடித்து நொறுக்கியும் வேலூர் இப்ராஹிமை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலின்போது உடன் பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. மேலும் உடனிருந்த காவலர்களும் பயங்கரமாகத் தாக்கப்பட்ட நிலையில் மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேலூர் இப்ராஹிம், “ தமிழகத்தில் முழுமையாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இதற்கு முழு காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலின்தான்” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும், “ பாதுகாப்பிற்கு வந்திருந்த காவல்துறையினர் கொலை செய்ய முற்பட்ட மர்ம நபர்கள் மீது தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் அவர்களிடம் காவல் துறையினர் கெஞ்சுவது வருத்தம் அளிப்பதாகவும் வேலூர் இப்ராஹிம் வருத்தத்துடன் தெரிவித்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் போல் செயல்படக்கூடிய தமுமுக, எஸ் டி பி ஐ, பிஎஃப்ஐ போன்ற அமைப்புகளை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர்,” தமிழகத்தில் காவல் துறையினருக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு அவலமான சூழல் தற்போது நிலவி வருகிறது. இதற்கு தமிழக முதல்வர்தான் காரணம்” என ராமநாதபுரத்தில் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்
செய்தியாளர்: பொ. வீரக்குமரன்,இராமநாதபுரம்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.