ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடியின் சகோதரர்

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடியின் சகோதரர்

மோடி சகோதரர்

மோடி சகோதரர்

கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு  சென்ற தாமோதர தாஸ் பங்கஜ மோடி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் தாமோதர தாஸ் பங்கஜ மோடி ராமநாதபுரத்தில் பாஜகவை சேர்ந்த நிர்வாகி தம்பதியரை  நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே  இளஞ்செம்பூர் கிராமத்தில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் மருத்துவர் ராம்குமார் என்பவருக்கு தமிழ்வாணி என்பவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் தாமோதர தாஸ் பங்கஜ மோடி ராமநாதபுரத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று புதிய தம்பதியர் வாழ்த்தி ஆசீர்வதித்தார்.

  அதனைத் தொடர்ந்து கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு  சென்ற தாமோதர தாஸ் பங்கஜ மோடி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாமோதர தாஸ் பங்கஜ மோடியை பாஜக மாவட்ட   நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மாலை சால்வை  அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும், இயற்கை  முறையில் தயாரிக்கப்பட்ட பனங்கருப்பட்டியை வழங்கினர்.

  செய்தியாளர்: சர்க்கரை முனியசாமி - கமுதி

  Published by:Murugesh M
  First published:

  Tags: BJP, Ramanathapuram