ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

என்னை வாழ வைக்கிறேன் என்றார்... அவரை நம்பினேன், ஆனால் - மாஜி அமைச்சர் வீடு முன் நடிகை சாந்தினி பரபரப்பு புகார்

என்னை வாழ வைக்கிறேன் என்றார்... அவரை நம்பினேன், ஆனால் - மாஜி அமைச்சர் வீடு முன் நடிகை சாந்தினி பரபரப்பு புகார்

நடிகை சாந்தினி

நடிகை சாந்தினி

Actress Shanthini | ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட வந்த துணை நடிகை சாந்தினியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர்மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி என்பவர், ``கடந்த ஐந்து வருடங்களாக மணிகண்டனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன். இதன் காரணமாக, மூன்று முறை கர்ப்பம் அடைந்திருக்கிறேன். மணிகண்டனின் நெருக்கடி காரணமாக அந்த கர்ப்பத்தைக் கலைத்துள்ளேன். முதலில் திருமணம்செய்து கொள்வதாகக் கூறிவிட்டு இப்போது என்னை அவர் ஏமாற்றிவிட்டார்" என்று போலீஸில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரை அடுத்து, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன்மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. மேலும், பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவர் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட பின்பு பலமுறை அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர், சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நடைபெற்றுவரும் வேளையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாந்தினி அளித்திருந்த புகாரை அவர் தரப்பு திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, ``சாந்தினிமீது மணிகண்டன் தனது புகழுக்குக் களங்கம் விளைவித்ததாக வழக்கு தொடர்ந்தால் என்ன ஆகும்" என்று கூறி, மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Also Read : கல்லூரி மாணவி கொலை.. காட்டிகொடுத்த தொப்பி - இளைஞர் சிக்கியது எப்படி?

இந்நிலையில் இன்று ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சொந்தமான இல்லத்திற்கு திடீரென வந்து தனக்கு நியாயம் வேண்டி அவர் வீட்டை முற்றுகையிட நடிகை சாந்தினி முயன்றார், அப்போது செய்தியாளரிடம் பேசிய நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னிடம் இருவருடைய எதிர்காலம் கருதி வழக்கை ரத்து செய்ய கூறினார், அதன் அடிப்படையில் நான் ரத்து செய்தேன், உன்னை வாழ வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர் இதுவரை என்னை சந்திக்காமல் தலைமறைவாகி வந்த நிலையில், நான் மதுரையில் அவரைப் பார்த்த போது அவர் என்னை வரச் சொன்னார், நான் சென்றபோது அவர் அங்கு இருந்து கொண்டு என்னை பார்க்காமல் ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார்,  என்னை பெட்ரோல் ஊற்றி கொளுத்தவும் முயற்சி நடந்தது, அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன, இதனால் அவருடைய வீட்டிற்கு நேரடியாக வந்து நியாயம் கேட்பதற்காக நான் வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்,

இதனை அடுத்து மணிகண்டனுடைய உறவினர்கள் ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்த நிலையில் காவல்துறையினர் அவரை அங்கிருந்து பஜார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்துவிட்டு, பின்னர் அங்கிருந்து அவரை பாதுகாப்புடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

செய்தியளார் : வீரகுமரன் பொன்னுசாமி, ராமநாதபுரம்

First published:

Tags: Ramanathapuram