Home /News /ramanathapuram /

சமையல் அறையில் விளையாடிய குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்... பாத்திரத்தில் மாட்டி கொண்ட குழந்தையின் தலை போராடி மீட்பு

சமையல் அறையில் விளையாடிய குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்... பாத்திரத்தில் மாட்டி கொண்ட குழந்தையின் தலை போராடி மீட்பு

பாத்திரத்தில் மாட்டி கொண்ட குழந்தையின் தலை

பாத்திரத்தில் மாட்டி கொண்ட குழந்தையின் தலை

Ramanathapuram : பரமக்குடி அருகே பாத்திரத்தில் குழந்தையின் தலை மாட்டிக்கொண்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி குழந்தையை காயமின்றி மீட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிச்சாமி-வனிதா தம்பதியருக்கு ஒன்றரை வயதில் அஜித் என்ற ஆண் குழந்தை உள்ளார். அஜித் வீட்டில் உள்ள சமையலறையில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது அகிருந்த பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடியுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக் கொண்டது. இதனால் ஏற்பட்ட வலியாலும்,  பயத்தாலும் அஜித் சத்தமிட்டு அழுது, கூச்சலிட்டதைப் பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட குழந்தையின் தலை


    பின்னர், குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை வெளியே எடுக்க பல மணி நேரம் போராடியுள்ளனர். ஆனால், அவர்களால் அந்த பாத்திரத்தை வெளியே எடுக்க முடியால் தவித்தனர். இந்நிலையில், பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றனர்.

    Must Read : சிவகங்கையில் அனுமதியின்றி செயல்படும் 40 டாஸ்மாக் பார்கள்.. அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு- ஆர்டிஐ தகவல்

    குழந்தையின் தலையில் இருந்த பாத்திரம் அகற்றப்பட்டது.


    அங்கே, இருந்த தீயணைப்பு  வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி குழந்தையின் தலையில் இருந்த  பாத்திரத்தை வெட்டி, குழந்தைக்கு எந்தவித காயமும் இன்றி பத்திரமாக அகற்றினர். இந்நிலையில், தீயணைப்பு  வீரர்களின் இந்த செயலை அப்பகுதியில் உள்ள பொது மக்கள் வெகுவாகப் பாராட்டியும் நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.

    செய்தியாளர் - கு.தமிழ்ச்செல்வன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Child, Ramanathapuram

    அடுத்த செய்தி