Home /News /ramanathapuram /

இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்த 8 பேர்... போலீசார் விசாரணை

இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்த 8 பேர்... போலீசார் விசாரணை

தமிழகம் வந்த இலங்கை அகதிகள்

தமிழகம் வந்த இலங்கை அகதிகள்

Ramanathapuram district News: இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்த 8 பேரை மீட்ட போலீசார் மண்டபம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதில் பலர் கடல்வழியில் கள்ளத்தனமாக ராமேஸ்வரத்திற்கும் வருகின்றனர்.

    அந்த வகையில், இலங்கையில் இருந்து 3 குழந்தைகள் உட்பட 8 பேர் தனுஷ்கோடி பகுதிக்கு அகதிகளாக வந்துள்ளனர். அவர்களை மீட்ட போலீசார் மண்டபம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் கியூ பிரிவு கடலோர காவல் குழும போலீசார் மேற்கொண்ட விசாரணையில், யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை பகுதியை சேர்ந்த கார்த்திக், ரத்தினம் ரஞ்சித், சாகுல் ஹமீது, ரஞ்சிதா கீதா குமாரி என்பது தெரியவந்தது.

    மேலும், துவாரகன், நிரஞ்சன், ராமணத பிலேந்குமாரி, மித்ரா ஆகியோரும் கள்ளப்படகு மூலம் வந்ததும் தெரிந்தது. மண்டபம் காவல்நிலையத்தில் வைத்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 129 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.

    Must Read :  இருசக்கர வாகனம், அடி பம்பு வரிசையில் நுழைவு வாயில் கேட்டுக்கும் சேர்த்து கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர்.. தொடரும் அவலம்..

    இந்த எண்ணிக்கையில், மேலும் 8 பேர் சேர்ந்துள்ள நிலையில், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த  வந்த அகதிகளின் எண்ணிக்கை  137ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - சேது குமரன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ramanathapuram, Sri Lanka, Srilankan Refugees

    அடுத்த செய்தி