முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / இளைஞரை கொலை செய்ய நீதிமன்றத்தில் காத்திருந்த கும்பல் - பயங்கர ஆயுதங்களுடன் 7பேர் கைது

இளைஞரை கொலை செய்ய நீதிமன்றத்தில் காத்திருந்த கும்பல் - பயங்கர ஆயுதங்களுடன் 7பேர் கைது

7 பேர் கைது

7 பேர் கைது

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை கொலை செய்ய திட்டமிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள மரக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார்(25). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மதுரை மண்டலமாணிக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கு தொடர்பாக கமுதி நீதிமன்றத்திற்கு வந்த பாலகுமாரை முன்பகை காரணமாக கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளது. அதற்காக கத்தி, அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கமுதி நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.

இந்நிலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன், சரவணகுமார், வல்லரசு, காளீஸ்வரன், சிவசங்கர்,  ஷாஉசேன், விக்னேஸ்வரன் உள்ளிட்ட  7 ரவுடிகளை கமுதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், கார், பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Also see... Cyclone Mandous Live: 10 கிமீ வேகத்தில் நகரும் மாண்டஸ் புயல்.. நாளை கரையைக் கடக்க வாய்ப்பு!

இதற்கிடையில் தன்னை கொலை செய்ய ரவுடி கும்பல்கள் வந்துள்ளதை அறிந்த பாலகுமார் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி சென்று விட்டார். இந்நிகழ்வு கமுதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: மு.சர்க்கரை முனியசாமி, கமுதி

First published:

Tags: Arrested, Attempt murder case, Crime News, Local News, Ramanathapuram