ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

Ramanathapuram district | ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை கோவில் ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புண்ணியதலமான உத்தரகோசமங்கை கோவில், பூலோகத்தில் தோன்றிய முதல் கோவில் என்ற கருத்து நிலவுகிறது. இங்கே மங்களநாதர், மங்களநாயகி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இந்த கோவிலில், ஆடும் திருக்கோலத்தில் அமைந்த 6 அடி உயரத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி, மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்று சொல்லப்படுவதால், மரகத சிலை அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் அந்த சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும். ஆனர்ல், ஆண்டுக்கு ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம்.

இங்கிருக்கும் நடராஜர் சிலைக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேக-அலங்காரம் செய்யப்படும். அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மிக முக்கிய நாளாக ஆருத்ரா அபிஷேப் பெருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.

சிவனின் ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெறலாம் எனறு சொல்லப்படுகிறது. குறிப்பாக உத்திரகோசமங்கை திருத்தலத்தில் இருக்கும் மரகத நடராஜரை தரிசிக்க இந்த பிறவியிலும் நன்மை தருவார் என்றும் அடுத்த பிறவி இன்றி, பிறவிப்பிணி தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்கள நாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா வருகிற 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக இருக்கும். அதனை ஈடு செய்யும் பொருட்டு 21.1.2023 அன்று (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களும் 21.1.2023 அன்று வழக்கம்போல் இயங்கும்.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

மேலும், 6.1.2023 வெள்ளிக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்தி லுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Holiday, Local News, Ramanathapuram