ராமநாதபுரம்: கமுதி அருகே 3,000 ஆண்டுகள் பழமையான கருப்பு சிவப்பு நிறத்திலான 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செய்யாமங்கலம் கிராமத்தில் கண்மாய் வரத்துக் கால்வாய் சீரமைக்கும் பணியின்போது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோர்கள் பயன்படுத்திய கருப்பு சிவப்பு நிறத்திலான முதுமக்கள் தாழிகள், மண் குவளைகள் கண்டெடுக்கப்பட்டது.
சமீபத்தில் பெய்த மழையின் போது, ஏற்கெனவே சீரமைக்கும் பணி தொடங்கியதால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரும், பட்டதாரியுமான முருகானந்தம் என்பவர் மண்ணில் சிதைந்து புதைந்திருந்த நிலையில் வெளியில் தென்பட்ட முதுமக்கள் தாழிகளை கண்டுள்ளார். பின்னர், அவை என்ன என்பதை அறிந்துகொள்ள அவற்றை தோண்டி எடுத்துள்ளார். அதில், பல்வேறு நிறத்தில் மண், சிறிய கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மண் குவளைகள், எலும்புக்கூடுகள், இரும்புக் கம்பிகள் போன்றவையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முதுமக்கள் தாழிகள் மற்றும் மண் குவளைகள் 3,000 ஆண்டுகள் பழமையானது என முருகானந்தம் இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்களுக்கு தகவல் அளித்தபோது கூடுதல் தகவல்களை சேகரித்துள்ளார். மேலும், கமுதி பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், கூடுதல் தகவல்களை அளிக்கவும், செய்யாமங்கலம் கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அகழாய்வு நடத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இறந்த முதியவர்களை அடக்கம் செய்வதற்காக இந்த முதுமக்கள் தாழிகள் பண்டைய தமிழர்களின் நடைமுறையில் இருந்துள்ளதாக கூறுகின்றனர்.
(செய்தியாளர்- வீரகுமரன்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Excavation, Ramanathapuram, Tamil Nadu