ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

65 வயது மூதாட்டியை கத்தியால் குத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

65 வயது மூதாட்டியை கத்தியால் குத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

இளைஞர் முருகானந்தம்

இளைஞர் முருகானந்தம்

அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர்  திரண்டதால் மூதாட்டியை அங்கேயே விட்டுவிட்டு முருகானந்தம் தப்பி ஓடியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 65 வயது மூதாட்டியை  பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசடிப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த  65 வயது மூதாட்டி மாரியம்மாள். இவர் 21வயது இளைஞர் முருகானந்தம் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் அந்த மூதாட்டியை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி கத்தியால் குத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

  மேலும் படிக்க : சவுக்கு சங்கரை சிறையில் சந்திக்க பார்வையாளர்களுக்கு தடை...

  அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர்  திரண்டதால் மூதாட்டியை அங்கேயே விட்டுவிட்டு முருகானந்தம் தப்பி ஓடியுள்ளார்.

  இதனையடுத்து அந்த கிராமத்தினர் மூதாட்டியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து இது குறித்து புகாரின் அடிப்படையில் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் தப்பியோடிய  முருகானந்தத்தை கைது செய்து ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஆலங்குடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  புதுக்கோட்டை செய்தியாளர் : ரியாஸ்

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Pudukottai, Sexual harassment, Sexually harrassed