ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

'அந்த மனசுதான் கடவுள்'.. கஷ்டம் கொடுத்த நடத்துநர் மீது நடவடிக்கை வேண்டாமென கூறிய மாற்றுத்திறனாளி!

'அந்த மனசுதான் கடவுள்'.. கஷ்டம் கொடுத்த நடத்துநர் மீது நடவடிக்கை வேண்டாமென கூறிய மாற்றுத்திறனாளி!

மாற்றுத்திறனாளி மாணவர்

மாற்றுத்திறனாளி மாணவர்

காலையில் மனவேதனையோடு பேசிய மாணவர், மாலையில் கருணையோடு நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pudukkottai | Pudukkottai

  புதுக்கோட்டையில் தன்னை துயரத்திற்கு ஆளாக்கிய நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவருக்காக பரிந்துரைத்து பேரிய மாற்றுத்திறனாளி மாணவனின் வீடியோ வைரலாகி வருகிறது.

  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கணாமலைபட்டியை சேர்ந்த பார்வையற்ற சிறுவன் முகமது ரபிக், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.

  பார்வையில்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு தினசரி தனியாக பயணித்து கல்லூரி சென்று வருகிறார். அந்த வகையில் வழக்கம் போல் நேற்று இவர் கல்லூரிக்கு சென்ற போது பேருந்தில் நடத்துனர் ஒருவர் மாணவரை டிக்கெட் எடுக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

  மாற்றுத்திறனாளி பாஸ் காமித்த போதும், கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என கூறி வற்புறுத்தியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர், தனக்கு நேர்ந்த துயரம் யாருக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்றும், தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டிருந்தார்.

  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அறிந்த மாணவர், நேற்று மாலையே மீண்டும் ஒரு வீடியோ பேசி வெளியிட்டுள்ளார். அதில், தன்னை துயரத்தில் உள்ளாக்கிய நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம், இது போன்று மற்றவர்களும் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும், இதே போன்று மற்றவர்களிடம் அந்த நடத்துனர் நடந்து கொள்ளாமல் இருந்தால் போதும் என கூறியிருந்தார். மேலும், உடலால் ஏற்கனவே தங்களுக்கு வலியிருப்பதாக கூறிய அவர், மனதாலும் புண்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

  இதையும் படிங்க | வான்கோழியை விழுங்க முயன்ற 10 அடி நீள மலைப்பாம்பு.. புதுக்கோட்டையில் சம்பவம்

  இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. தன்னை துன்பத்தில் ஆளாக்கினாலும் அவரை தண்டிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட மாணவரின் நல்லெண்ணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

  இந்த நிலையில், இந்த செய்தி அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், சிறுவனை துயரத்தில் உள்ளாக்கிய நடத்துனர் முருகேசனை தற்காலிக பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்காலிக பணியிட நீக்கம் முடிந்த பிறகு வேறு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Pudukkottai, Viral Video