Home /News /pudukkottai /

மனநலம் பாதித்தவரை பணியில் சேர்த்து சம்பள பணம் கையாடல்.. ஊராட்சி செயலர் மீது கிராமமக்கள் புகார்..

மனநலம் பாதித்தவரை பணியில் சேர்த்து சம்பள பணம் கையாடல்.. ஊராட்சி செயலர் மீது கிராமமக்கள் புகார்..

ஊராட்சி செயலர் மீது புகார் தெரிவித்த பனையப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி

ஊராட்சி செயலர் மீது புகார் தெரிவித்த பனையப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி

புதுக்கோட்டை போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை ஊராட்சி பணியாளர் பட்டியலில் சேர்த்து, ஊதியத்தை கையாடல் செய்த ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவுக்கு உட்பட்ட பனையப்பட்டி ஊராட்சியில் கடந்த 24 ஆண்டுகளாக ஊராட்சி செயலராக குருநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஒரே பகுதியில் 24 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருவதால் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் பனையப்பட்டி ஊராட்சியில் 10 ஊராட்சி பணியாளர்கள் பணிபுரிந்து வரக்கூடிய சூழ்நிலையில் ஊராட்சி பணியாளராக பணிபுரிந்து வரும் சரவணன் என்பவரது சகோதரர் கந்தசாமி என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சா போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு பனையப்பட்டி ஊராட்சி கடை வீதியில் சுற்றி வரும் நபராவார்.

    இந்நிலையில் அவரது பெயரை பணியாளர் பட்டியலில் சேர்த்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக மாதம் 7,500 வீதம் கந்தசாமி பெயரில் அவரது ஊதியம் பெற்று அந்த பணத்தை ஊராட்சி செயலர் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்த தகவலை பெற்றுள்ள நிலையில் இதுகுறித்து புகார் மனு கொடுத்துள்ளனர்.

    Also see... மாணவிகளிடம் ஆபாசமாக வாட்ஸ் அப்பில் பேச்சு... தலைமறைவான பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது

    ஆனால் இந்த புகார் மனுவுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உடனடியாக இதில் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை பணியாளர் பட்டியலில் சேர்த்து மாதம் 7,500 விதம் 2 ஆண்டு காலமாக ஊராட்சிக்கு சேரவேண்டிய நிதியை கையாடல் செய்த ஊராட்சி செயலராக உள்ள குருநாதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: ர.ரியாஸ்,புதுக்கோட்டை 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News

    அடுத்த செய்தி