முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / WATCH - ஒரே ஜம்ப்.. 50 அடிக்கு தாவிய ஜல்லிக்கட்டு காளை..! வாயை பிளந்த புதுக்கோட்டை மக்கள்..

WATCH - ஒரே ஜம்ப்.. 50 அடிக்கு தாவிய ஜல்லிக்கட்டு காளை..! வாயை பிளந்த புதுக்கோட்டை மக்கள்..

பறக்கும் காளை

பறக்கும் காளை

50 அடிக்கு மேல் பறந்து தரை தொட்ட அந்த காளைக்கு சிறிய அடி கூட படாமல் விழுந்த ஜோரில் துள்ளி குதித்து ஓடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ஆலத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 737 காளைகள் அவிழ்க்கப்பட்டு 211 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இதில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிகட்டு போட்டிக்கு மத்தியில் வாடிவாசலிருந்து வெளியேறிய காளை ஒன்று கூட்டத்துக்குள் புகுந்து அங்கு வரிசையாக நின்றிருந்த கூட்டத்தினரை பார்த்தது. உடனடியாக பின்னோக்கி சென்ற காளை, கூட்டத்திற்குள் இருக்கும் பார்வையாளர்களை எந்தவித தொந்தரவும் செய்யாமல் ஒரே ஜம்பாக சுமார் 50 அடிக்கு மேலாக தாவி சென்ற நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதை அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் யாரும் இது போல் இதுவரை கண்டிராத நிகழ்வாக இது கருதப்படுகிறது.

செய்தியாளர் : ரியாஸ் (புதுக்கோட்டை)

First published:

Tags: Bull, Jallikattu, Pudukottai