ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

வேங்கைவயல் வழக்கு சவால் நிறைந்தது - திருச்சி டிஐஜி சரவணன் சுந்தர்

வேங்கைவயல் வழக்கு சவால் நிறைந்தது - திருச்சி டிஐஜி சரவணன் சுந்தர்

திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர்

திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர்

இது தொடர்பாக 55 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் பட்டியல் இனமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் பல நாட்களாகியும் யாரையும் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஐஜி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக 55 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், வேங்கை வயல் மக்களிடம் சிபிசிஐடி எஸ்.பி. தில்லை நடராஜன், திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு குறித்து திருச்சி டிஐஜி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, “இறையூர் வேங்கவயல் வழக்கைப் பொருத்தவரையில் எல்லா விதமான விசாரணையும் செய்துள்ளோம், காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டோம், இதனை தோல்வி என்று பார்க்க முடியாது. எங்களால் முடிந்த அளவில் என்னென்ன முடியுமோ அந்த அளவிற்கு விசாரணை, இன்னும் கூடுதலாக நுட்பமாகவும் முக்கியத்துவத்தோடும் விசாரிக்க வேண்டும் என்பதற்காக சிபிசிஐடியிடம் இந்த வழக்கை அரசு வழங்கியுள்ளது,

சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் எது உண்மையோ அது வெளியே வரும். காலதாமதம் இன்றி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலிசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் காவல்துறையினருக்கு எந்தவிதமான புற அழுத்தமும் இல்லை. இந்த வழக்கில் இன்னும் கூடுதலாக விசாரிக்க வேண்டி உள்ளது அதனை சிபிசிஐ போலீசார் விசாரிப்பார்கள்,

இது கண்டிப்பாக சவால் நிறைந்த வழக்கு தான், நுட்பமாகவும் அறிவியல் பூர்வமாகவும் சாட்சிகளின் அடிப்படையில் தான் காவல்துறையினரும் சரி, சிபிசிஐடி போலீசாரும் சரி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தமிழக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு கூட அவர்கள் விசாரணை மேற்கொள்ளலாம் எனக் கூறினார்.

செய்தியாளர் : ரியாஸ் (புதுக்கோட்டை)

First published:

Tags: Caste