புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ‘ மத்திய அரசால் தமிழகத்திற்கு மறுக்கப்படும் நீதியும் நிதியும்’ என்ற விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதற்கு முன்னதாக ரோஜா இல்லம் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து சமூகத்திற்கும் சமூக நீதி கிடைக்க மத்திய மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த ஜாதிகளுக்கு தகுந்தார் போல் கல்வி வேலைவாய்ப்பில் இடம் அளித்திட வலிவுறுத்தி வருகின்ற 16 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆட்சியர் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீதம் இடத்திற்கு மேல் வடமாநிலத்தவர்கள் சேர்ந்திருப்பது கண்டிக்கதக்கது. என்எல்சியில் தற்போது நடத்தப்பட்ட 250 பணிக்கான தேர்வில் ஒரு தமிழருக்கு கூட இடம் கிடைக்காமல் அனைத்து இடங்களிலும் வட மாநிலத்தவருக்கே அளிக்கப்பட்டுள்ளது.
என்எல்சிக்கு இடம் அளித்த பூர்வகுடி மக்களான தமிழர்களுக்கு இடம் அளிக்காததும், 13 ஆயிரம் பேருக்கு மேல் தமிழ் மக்கள் அப்ரண்டீஸாக இருப்பதும் வேதனை அளிக்கிறது என்று கூறிய வேல்முருகன், தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைவாய்ப்பை முழுவதுமாக வடமாநிலத்தவர் ஆக்கிரமித்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் மத்திய அரசு பணி மற்றும் தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், என்ன நடந்தது என்பதையும் எவ்வாறு அவர் இறந்தார் என்பதையும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தெளிவு படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், மாணவி உயிரிழந்த 25 தினங்களாகியும் அவர் எப்படி உயிரிழந்தார் என்று காவல்துறையும் சிபிசிஐடி போலீசாரும் தெளிவுபடுத்தாமல் இருப்பது வேதனைக்குரியது. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் விசாரிக்க கூடாது எனது உத்தரவு பிறப்பித்திருப்பது கண்டிக்க தக்கது என்றும் கூறினார்.
மேலும் அனைத்து ஜாதி மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பில் இடம் வழங்கினால் தான் தமிழகத்தில் போட்டி பொறாமை இன்றி அனைவருக்கும் சமமான இட ஒதுக்கீடு கிடைக்கும், அமைதியான சூழல் நிலவும் என்றும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், ‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த 3 சுங்கசாவடிகள் நான் கொடுத்த அழுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளது. மற்ற மாநாகராட்சிகளில் உள்ள சுங்கசாவடிகளை மூட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் மூட வேண்டும் என்பதே எங்களின் கருத்து’ என்றும்
ஆன்லை லாட்டரி விவகாரத்தில் மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பலமான சட்டம் இயற்றி ஆன்லைன் லாட்டரியை தடை செய்ய வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தினார்.
Must Read : போலி அரெஸ்ட் வாரண்ட் தயாரித்து மில் உரிமையாளரை கடத்த முயற்சி.. ஆந்திராவை சேர்ந்த 3 பேர் கைது
தமிழர்களின் உரிமை சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் தமிழர்களின் நலன் காக்கவும் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானோடு சேர்ந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் பயணிப்போம் அதில் எங்களுக்கு ஒன்றும் தயக்கம் இல்லை என்று கூறிய வேல்முருகன், பாமகவோடு கூட்டணி சேர்ந்து பயணிக்க வாய்ப்பில்லை என்றும், அதே நிலையில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை பாமக முன்னெடுக்கும் போது அதற்கு நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம் என்றும் வேல்முருகன் கூறினார்.
செய்தியாளர் - ர.ரியாஸ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Naam Tamilar katchi, Pudukottai, Seeman, Velmurugan