முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / புதுக்கோட்டையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இருவர் உயிரிழப்பு..

புதுக்கோட்டையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இருவர் உயிரிழப்பு..

உயிரிழந்த சின்ராஜ், கார்த்திக்

உயிரிழந்த சின்ராஜ், கார்த்திக்

பட்டணம் அருகே இளைஞர்கள் வரும்போது திருப்பத்தூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி அதி வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த சின்ராஜ், கார்த்திக் ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பட்டணம் அருகே வரும்போது திருப்பத்தூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் மீதும் லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்து ஏற்பட்ட பிறகு தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உயிரிழந்த சின்ராஜ் என்பவர் நாளை சிங்கப்பூருக்கு செல்ல இருந்தார் என்றும் கூறப்படுகிறது. சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : ரியாஸ் (புதுக்கோட்டை)

First published:

Tags: Accident, Pudukkottai, Road accident