Home /News /pudukkottai /

ஸ்கூட்டியில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடிய கும்பல்.. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை

ஸ்கூட்டியில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடிய கும்பல்.. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை

பணத்தை திருடும் 3 பேர்

பணத்தை திருடும் 3 பேர்

Pudukkottai | புதுக்கோட்டையில் உள்ள பிரபல தனியார் ஜவுளி கடையில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஜவுளி எடுக்க சென்றார். அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு லட்சத்து 37000 ரூபாய் பணத்தை மூன்று மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த தகவல் அறிந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை தமிழ் நகரைச் சேர்ந்த சுதா என்ற பெண்மணி தனது கணவர் செபஸ்டினுடன் கீழ ராஜ வீதியில் உள்ளார். வங்கியில் 1,50,000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வடக்கு ராஜ வீதியில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக் கடைக்கு துணி வாங்க சென்றுள்ளார். அப்போது ஜவுளி கடையின் கீழ் தளத்தில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் 1,37,000 ரூபாய் பணத்தையும் வைத்துவிட்டு மேல் மாடிக்கு சென்றுள்ளார்.

    பின் அவர் வந்து பார்த்த பொழுது அவரது ஸ்கூட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் 1,37,000 ரூபாய்  திருடு போயிருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சுதா இதுகுறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சுதா வாகனத்தை நிறுத்தி சென்ற பின் அங்கு வரும் மூன்று நபர்களில் இரு நபர்கள் அந்த வாகனத்தின் அருகே செல்வதும் அதில் ஒரு நபர் ஸ்கூட்டியின் டிக்கியை லாவகமாகத்  திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு மற்றொரு நபரின் இரு சக்கர வாகனத்தில் வேகமாக ஏறி செல்வதும் தெரிய வந்துள்ளது.

    Also see...துபாயில் கொரோனாவில் பலியான தந்தை... அஸ்திக்காக காத்திருந்த பிள்ளைகள்..

    இந்த காட்சிகளின் அடிப்படையில் புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்: ர.ரியாஸ்,புதுக்கோட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CCTV Footage, Money, Pudukkottai, Theft

    அடுத்த செய்தி