ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

நெருங்கும் தீபாவளி.. களைகட்டிய விராலிமலை சந்தை..! ரூ.1 கோடிக்கும் மேல் விற்று தீர்ந்த ஆடுகள்!

நெருங்கும் தீபாவளி.. களைகட்டிய விராலிமலை சந்தை..! ரூ.1 கோடிக்கும் மேல் விற்று தீர்ந்த ஆடுகள்!

ஆடுகள் விற்பனை

ஆடுகள் விற்பனை

GOAT SALES | பல்வேறு சிறப்புகள் பெற்ற விராலிமலை வார சந்தை வழக்கம் போல் இன்று அதிகாலை கூடியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viralimalai | Pudukkottai | Pudukkottai

    விராலிமலை ஆட்டுசந்தையில், தீபாவளி நெருங்குவதையொட்டி, ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்று தீர்ந்தன. 

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை அப்பகுதிகளில் மிகவும் பிரபலமாகும். அதிகாலை தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் முதல் நாள் இரவே லோடு வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்லுவதும் வழக்கம்.

    அதிலும் குறிப்பாக புதுச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்து விராலிமலை சந்தையில் ஆடுகளை வாங்கி செல்வது என்பது விராலிமலை ஆடுகளின் தனி சிறப்பாகும்.

    இயற்கையான முறையில் மட்டுமே வளர்க்கப்படும் இந்த ஆடுகளை இறைச்சி கடைக்காரர்கள் மாமிசமாக விற்கும்போது மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்வதாக இறைச்சிக்கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

    இதையும் படிங்க | எஜமானரை காக்க விஷப்பாம்பை கடித்து கொன்ற வளர்ப்புநாய் - மோதலில் நாயும் உயிரிழந்த பரிதாபம்

    பல்வேறு சிறப்புகள் பெற்ற விராலிமலை வார சந்தை வழக்கம் போல் இன்று அதிகாலை கூடியது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

    முதல் நாள் முதலே காத்திருந்த வியாபாரிகள், போட்டி போட்டு கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். ஒரே நாளிலேயே ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்று தீர்ந்ததால் விவசாயிகள், ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

    காலை 7:30 மணி நிலவரப்படி ஒரு கோடி ரூபாயையும் தாண்டி வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Deepavali, Diwali, Pudukkottai, Viralimalai Constituency