முகப்பு /செய்தி /Pudukkottai / ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய முடியாது - அதிமுக ஒற்றை தலைமை குறித்து திருநாவுக்கரசர் கருத்து

ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய முடியாது - அதிமுக ஒற்றை தலைமை குறித்து திருநாவுக்கரசர் கருத்து

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

Pudukkottai : ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய முடியாது எனவும், அதுபோல் ஒற்றை தலைமையால் மட்டுமே அதிமுகவை வழிநடத்த முடியும் எனவும் புதுக்கோட்டையில் பேசிய திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுகவின் தற்போதைய நிலை  கவலைக்கு உரியதாகவும் வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய முடியாது. எனவும், அதுபோல் ஒற்றை தலைமையால் மட்டுமே வழிநடத்த முடியும் என்றும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட கடைசி மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள நகரமன்றத்தில் கடந்த 3 நாட்களாக நூற்றாண்டு விழா நடைபெற்று வரும் நிலையில், 4ஆவது மற்றும் இறுதி நாள் விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து, நான் ஏற்கனவே அந்த கட்சியில் இருந்தவர் என்ற முறையில் எனக்கு கவலைக்குரியதாகவும் வருத்தமளிப்பதாகவும் உள்ளது என்று கூறினார். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய முடியாது. அதுபோல் ஒற்றை தலைமையால் மட்டுமே வழிநடத்த முடியும், இது எனது இலவச அறிவுரை என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே வேளையில் யார் அந்த ஒற்றை தலைமை என்பதை கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் தான் முடிவு செய்ய வேண்டும், கட்சியில் தலைமைப் பொறுப்பை யாருக்கு ஆதரவு இருக்கு என்பதை காட்ட அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று அவர்களுக்கான நியாயமான தீர்ப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அதிமுகவின் தற்போதைய நிலை காலம் செய்த கோலம் என்றும் கூறினர்.

Must Read : அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கமா?

தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசர், தமிழக ஆளுநர் அவர்கள் ஆளுநர் வேலையை  மட்டும் பார்க்க வேண்டும், அது தான் அவருக்கும் நல்லது. அவரை நியமித்த ஒன்றிய அரசுக்கும் நல்லது. அதைவிடுத்து அவரது நிர்வாகத்தில் செயல்படாமல் சாதி, மதம், சனாதான தர்மம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்று தெரிவித்தார்.

செய்தியாளர் - ர.ரியாஸ், புதுக்கோட்டை

First published:

Tags: ADMK, Congress, Pudukottai, Thirunavukkarasar