Home /News /pudukkottai /

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்காலத்தில் திறப்பதற்கான வாய்ப்பே இல்லை - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்காலத்தில் திறப்பதற்கான வாய்ப்பே இல்லை - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதன்

அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு எதிரானது தேவை இல்லாதது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை விற்பதற்கு ஏன் முன் வந்துள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, ஸ்டெர்லைட் ஆலை எதிர்காலத்தில் திறப்பதற்கான வாய்ப்பே இல்லை, முதலமைச்சர் எடுத்து இருக்கக்கூடிய நிலைப்பாட்டின் வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் பரத் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் நேரில் பார்வையிட்டு மாணவியின் பெற்றோரிடமும் மாணவனிடமும் நலம் விசாரித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. தொடர்ந்து, அந்த கட்டிடத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பள்ளிக் கட்டிடங்களில் எந்த ஒரு புனரமைப்பு பணிகளும் செய்யாததாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது, இருப்பினும் தமிழக முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் இதில் தனிக்கவனம் செலுத்தி பழுதடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து காயம் அடைந்த மாணவன் பரத் நலமுடன் இருக்கிறார் அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்ய மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை ஏன் விற்பதற்கு முன்வந்துள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே விற்பது அவர்கள் முடிவு அதை யார் வாங்குகிறார்கள் என்று பார்த்துக் கொள்வோம், ஸ்டெர்லைட் ஆலை எதிர்காலத்தில் திறப்பதற்கான வாய்ப்பே இல்லை, இது முதலமைச்சர் எடுத்து இருக்கக்கூடிய நிலைப்பாட்டின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுற்றுச்சூழலை பாதிக்காத ஏதேனும் தொழிற்சாலை ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்ட இடத்தில் தொடங்கப்பட்டால் அது குறித்து எதிர்காலத்தில் பரிசீலனை செய்யப்படும்.

அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு எதிரானது தேவை இல்லாதது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  இந்திய சரித்திரத்தில் புதிய வரலாற்றைப் படிக்கும் வகையில் இதுவரை 187 நாடுகள் பங்கேற்று ஒரு விளையாட்டு நடந்ததே இல்லை என்ற நிலையில் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த அனுமதியைப் பெற்றுத் தந்து முதலமைச்சர் தலைமையிலேயே குழு அமைத்து  அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, அதில் 187 நாடுகள் பங்கேற்கவுள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் ஒலிம்பிக் சுடரை தொடங்கி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்துள்ளார். இதன் பின்னர் ஒலிம்பிக் தீபமானது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் என 75 நகரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு இறுதியாக ஜூலை 28ம் தேதி  தமிழக முதலமைச்சர் கையில் ஒலிம்பிக் தீபம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

பைட்:-
மெய்யநாதன் (தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்)
Published by:Esakki Raja
First published:

Tags: Sterlite

அடுத்த செய்தி