ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள கல்குவாரி செயல்படாது - வட்டாட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள கல்குவாரி செயல்படாது - வட்டாட்சியர் அறிவிப்பு

கல் குவாரி

கல் குவாரி

Pudukkottai district | தொன்மையும், கலைச்சிறப்பும் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலைக்கு அருகே கோப்பிலிக்காடு கிராமத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரி செயல்படாது என வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தொன்மை வாய்ந்தவை. வரலாற்றுக்கு முந்தைய கால மனிதா்கள் வாழ்ந்த இடமாகவும் இந்த மாவட்டம் கருதப்படுகிறது. இந்த மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ள இறந்தோரை புதைக்கும் முற்கால இடங்களே இதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கும் தொல்பொருட்கள், நினைவுச்சின்னங்கள் போன்றவை தென்னந்திய வரலாற்றின் ஒரு அரசியல் மாதிரியாக இந்த மாவட்டம் திகழ்வதை எடுத்துக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மாவட்டத்தை பாண்டியா்கள், சோழா்கள், பல்லவா்கள், ஹொய்சாளா்கள், விஜயநகரம் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆண்டு வந்துள்ளார்கள்.

இவா்கள் மிகச் சிறந்த கோவில்களையும், நினைவு சின்னங்களையும் எழுப்பியுள்ளார்கள். இங்கிருக்கும் குடைவரை கோவில்களும், ஓவியங்களும், சிற்பங்களும் உலகம் வியக்கும் வகையில் அமைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சித்தனவாசல் ஓவியங்கள், குடிமியான் மலை, மலையடிப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடைவரைக் கோவில்களும், பிற வகை கேவில்களும், சிறப்ங்களும், ஓவியங்களும் உலகப் புகழ் பெற்றவை. பாறைகள் நிறைந்த மலைகளையும், பாறைகள் நிறைந்த நிலப்பரப்பையும் கொண்ட இந்த பகுதிகளில் தற்போது, கல்குவாரிகள் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

அவற்றுள் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே கோப்பிலிக்காடு கிராமத்தில் உள்ள கல்குவாரியும் ஒன்று. இங்கே, காற்று மாசு அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அந்த கல்குவாரி செயல்படாது என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Pudukkottai, Quarry