Home /News /pudukkottai /

சிவன் கோவிலுக்கு சீர் கொண்டு சென்ற இஸ்லாமியர்கள்!

சிவன் கோவிலுக்கு சீர் கொண்டு சென்ற இஸ்லாமியர்கள்!

Pudukottai : புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பகுதியில் இந்து-முஸ்லீம் ஒற்றுமையும் அன்பான உறவுவும் தொடர்ந்து வருவதாகவும் இனிவரும் காலங்களிலும் இதேபோல் மத வேற்றுமைகளை கடந்து ஒற்றுமையோடு இருப்போம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Pudukottai : புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பகுதியில் இந்து-முஸ்லீம் ஒற்றுமையும் அன்பான உறவுவும் தொடர்ந்து வருவதாகவும் இனிவரும் காலங்களிலும் இதேபோல் மத வேற்றுமைகளை கடந்து ஒற்றுமையோடு இருப்போம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Pudukottai : புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பகுதியில் இந்து-முஸ்லீம் ஒற்றுமையும் அன்பான உறவுவும் தொடர்ந்து வருவதாகவும் இனிவரும் காலங்களிலும் இதேபோல் மத வேற்றுமைகளை கடந்து ஒற்றுமையோடு இருப்போம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அந்த விழாவிற்காக சீர் கொண்டு வந்த 2 கிராமங்களை சேர்ந்த இஸ்லாமியர்களை, நெடுவாசல் கிராம மக்கள் மாலை மரியாதையுடன் வரவேற்ற காட்சி காண்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த  மங்களநாயகி உடனுறை பாலாண்ட ஈஸ்வரர் சுவாமி ஆலயம் ஸ்ரீ நாடியம்மன் ஆலயம் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலயங்களின் கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, அந்தப் பகுதியின் கலாச்சாரத்தின் அடிப்படையில் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் உள்ள பல்வேறு கிராம மக்கள் நாட்டியக் குதிரை ஆட்டங்களுடனும் செண்டை உறுமி மேளங்கள் முழங்க கண்கவர் வாணவேடிக்கையுடன் நெடுவாசல் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்வில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும் அருகே உள்ள ஆவணம் மற்றும் காசிம்புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பூ, பழம், இனிப்புகள் அடங்கிய தட்டு தாம்பூழங்களை கையில் ஏந்தியபடி நெடுவாசல் கோயிலுக்கு சீர்வரிசை பொருட்களை  ஊர்வலமாக கொண்டு வந்தனர். அவர்களை நெடுவாசல் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் மாலை அணிவித்து வரவேற்று இஸ்லாமியர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.



    பின்னர், இஸ்லாமியர்கள் கொடுத்த சீர்வரிசை பொருட்கள் மற்றும் பணத்தை விழாக்குழுவினர் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த காட்சி காண்பவர்களுக்கு ஒரு வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக இப்பகுதி கிராமங்களில் உள்ள இந்து கோயில்களின் திரு விழாவின்போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிப்பது பாரம்பரியமாகத் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மதங்களைக் கடந்து மனித நேயத்தை தங்கள் பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போற்றி வருவதாக கூறும் அப்பகுதி  இஸ்லாமியர்கள் மற்றும் நெடுவாசல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை , தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் பொறுத்தவரையில் இந்து முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி ஒவ்வொரு கிராமத்திலும் மாமன் மச்சான்களாக மதங்களை கடந்து மனித நேயத்தோடு  அனைவரும் பழகி வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    Must Read : அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள்.. ஓபிஎஸ், இபிஎஸ் பொறுப்பில் இருந்து  ஒதுங்கிக்கொள்ள வேண்டும் - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி

    மேலும், காலங்கள் கடந்தும் தங்களுக்குள் அந்த அன்பான உறவுக்கு தொடர்ந்து வருவதாகவும் இனிவரும் காலங்களிலும் இதேபோல் மத வேற்றுமைகளை கடந்து ஒற்றுமையோடு இருப்போம் என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    செய்தியாளர் - ர.ரியாஸ், புதுக்கோட்டை
    Published by:Suresh V
    First published:

    Tags: Hindu Temple, Hindus and muslims, Muslim, Pudukottai, Sivan

    அடுத்த செய்தி