ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

மதுபோதையில் அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உள்நோயாளி... தூக்க ஊசியை செலுத்தி பிடித்த போலீசார்..!

மதுபோதையில் அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உள்நோயாளி... தூக்க ஊசியை செலுத்தி பிடித்த போலீசார்..!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai | புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளி ஒருவர் மதுபோதையில் மருத்துவக் கல்லூரி கதவு மற்றும் கண்ணாடிகளை உடைத்து ரகளை ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருக்கு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் உள் நோயாளியாக இருந்து வந்துள்ளர். இந்நிலையில் நேற்று இரவு (அக்.31-ம் தேதி) அவர் மருத்துவமனை வார்டை விட்டு வெளியேறி கடை வீதிக்கு சென்று மது அருந்திவிட்டு பின்பு  மீண்டும் தனது வார்டுக்கு செல்வதற்காக வந்துள்ளார்.

  அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவமனை காவலர்களை மது போதையில் தாக்கிய அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பக்க கண்ணாடி கதவு உள்பக்க கண்ணாடி ஆகியவற்றை கையால் அடித்து உடைத்து உள்ளார். இதனைப் பார்த்த மருத்துவமனை காவலர்கள் ஒன்று சேர்ந்து அவரை பிடிக்க முயன்றும் முடியாததால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

  இந்த தகவலின் பெயரில் அங்கு வந்த கணேஷ் நகர் காவல்நிலையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காவலர்கள் ஒன்றிணைந்து அந்த நபரை பிடித்து கைகளை கட்டி படுக்க வைத்தனர். பின்னர்  மருத்துவர்களை வரவழைத்து தூங்குவதற்கான ஊசியை அவருக்கு செலுத்தி மருத்துவமனையின் முன்பக்கத்திலேயே படுக்க வைத்தனர்.

  சம்பந்தப்பட்ட நபர் கைகளால் மருத்துவமனை கதவு கண்ணாடிகளை உடைத்தது அவரது கை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளிலும் இரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் சம்பந்தப்பட்ட நபர் சில மாதங்களாகவே அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் நேற்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாமல் தனது வார்டை விட்டு வெளியேறி மது அருந்தி விட்டு வந்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

  Also see... கும்பகோணம் சுவாமிமலையில் 7ம் நாள் கந்தசஷ்டி விழா...

  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளி ஒருவர் மருத்துவமனை நிர்வாகத்தின் கண்காணிப்பில் இருந்து வெளியேறி மது அருந்திவிட்டு வந்து மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து உடைத்து நொறுக்கிய நிகழ்வு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Hospital, Pudukottai