ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்: புதுக்கோட்டை செல்கிறது சமூகநீதி கண்காணிப்பு குழு!

நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்: புதுக்கோட்டை செல்கிறது சமூகநீதி கண்காணிப்பு குழு!

தமிழ்நாடு தலைமை செயலகம்

தமிழ்நாடு தலைமை செயலகம்

சமூகநீதி கண்காணிப்பு குழுவின் 4 பேர் கொண்ட துணைக் குழு 13.01.2023 அன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் சில மர்ம நபர் மலம் கழித்த சம்பவம் தொடர்பாக சமூக நீதிக் கண்காணிப்பு குழுவின் துணைக்குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொடையூர் வட்டம், வேங்கைவயல் கிராமத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாத சில நபர்களால் மனித கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின்

1.பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், உறுப்பினர்

2. பேராசிரியர் முனைவர் ஆர்.ராஜேந்திரன், உறுப்பினர்

3.  கோ. கருணாநிதி, உறுப்பினர்

4.மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத், உறுப்பினர்

ஆகிய நான்கு உறுப்பினர்கள் அடங்கிய துணைக் குழுவானது மேற்கண்ட கிராமத்தில் எதிர்வரும் 13.01.2023 அன்று ஆய்வு மேற்கொள்வதோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடவும் உத்தேசித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

First published:

Tags: Pudukkottai, Scheduled caste, Tamilnadu government