ஹோம் /நியூஸ் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டைக்கு ரூ.642 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி

புதுக்கோட்டைக்கு ரூ.642 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி

சட்டப்பேரவையில் கே.என்.நேரு

சட்டப்பேரவையில் கே.என்.நேரு

Tamil nadu Minister K.N.Nehru assembly Speech | விரைவில் அது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கே என் நேரு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதை விரைவில் முதல்வருடன் கலந்தாலோசித்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவது மட்டுமல்லாமல், புதுக்கோட்டையில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா கேள்வி எழுப்பினார்.. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே என் நேரு, புதுக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மூலமாக 12 மில்லியன் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

உள்ளூர் நீர் ஆதாரங்களின் மூலம் இரண்டு மில்லியன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்குவதற்கான பைப் லைன்கள் பழுதடைந்துள்ளன அவைகள் விரைவாக மாற்றப்பட்டு வருகின்றன என்றும்  அதேபோல புதுக்கோட்டைக்கு 642 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

First published:

Tags: K.N.Nehru, Pudukottai, TN Assembly