Home /News /pudukkottai /

தமிழகத்திலேயே மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றுபவர்கள் சிறைத்துறை காவலர்கள் தான் - அமைச்சர் ரகுபதி

தமிழகத்திலேயே மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றுபவர்கள் சிறைத்துறை காவலர்கள் தான் - அமைச்சர் ரகுபதி

Pudukkottai | இன்றைக்கு தமிழகத்திலேயே மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் சிறைத்துறையில் இருக்கக்கூடிய காவலர்கள்தான், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கும் அவர்களது குடும்பத்தை காப்பதற்கும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி  கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருகே உள்ள அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ரூபாய் 3.73 கோடி மதிப்பீட்டில் முன்வடிவமைக்கப்பட்ட பணிமனை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்காக அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சயில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், " இன்றைக்கு தமிழகத்திலேயே மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் சிறைத்துறையில் இருக்கக்கூடிய காவலர்கள்தான், இது வெளி உலகத்திற்கு தெரியாது. ஏனென்றால் பல வழக்குகளில் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்கள்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    அதனால் அவர்கள் குற்றம் புரிவதற்கு தயங்குவது கிடையாது. அவர்களோடு இருக்கக்கூடிய சூழ்நிலையிலே இன்றைக்கு பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகி கொண்டு இருப்பவர்கள்தான் சிறைத்துறையில் பணியாற்றக்கூடிய பல்வேறு துறையில் இருக்கக்கூடிய நபர்கள். இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கும் அவர்களது குடும்பத்தை காப்பதற்கும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யார் யாரெல்லாம் மிகவும் பயங்கரமான செயல்களில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

    Also see... சிதம்பரம் அருகே வெள்ளதால் தீவாக மாறிய கிராமம்...

    மேலும், “ தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஆறுமுகசாமியின் அறிக்கையை பரிசீலித்து வல்லுநர் குழுவின் கருத்துக்களைக் கேட்டு மேல் நடவடிக்கை எடுத்து  அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம். இந்த அரசாங்கம் விழிப்புணர்வோடு பணியாற்றிக் கொண்டிருப்பதால் தான் எங்கெல்லாம் கஞ்சா  நடமாட்டம் இருந்ததோ அவற்றை எல்லாம் கண்டுபிடித்து தடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதனை பார்த்துதான் தமிழகத்தில் கஞ்சா அதிகம் இருப்பதாக எல்.முருகன் போன்றோர் குற்றம் சாட்டுகின்றனர் என்றார்.

    செய்தியாளர்: ர.ரியாஸ்,புதுக்கோட்டை 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Pudukkottai

    அடுத்த செய்தி