முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / புதுக்கோட்டை தொழிலாளியின் திருமணத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிங்கப்பூர் தொழிலதிபர்!

புதுக்கோட்டை தொழிலாளியின் திருமணத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிங்கப்பூர் தொழிலதிபர்!

வேட்டி, சட்டையில் வந்த சிங்கப்பூர் தொழிலதிபர்

வேட்டி, சட்டையில் வந்த சிங்கப்பூர் தொழிலதிபர்

Pudukkottai News : சிங்கப்பூரில் 17 வருடங்களாக தனது நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளியின் திருமணத்தில் கலந்து கொள்ள சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வருகை தந்த தொழிலதிபரை சென்டை மேளம் முழங்க குதிரை வண்டியில் அழைத்து வந்து மரியாதை செய்த மணமகன்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளையை சேர்ந்தவர் மாரிமுத்து இவர் கடந்த 17 வருடங்களாக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தனது திருமணத்திற்காக கடந்த மாதம் ஊருக்கு வந்த மாரிமுத்து தனது திருமணத்திற்கு வருமாறு தனது நிறுவனத்தின் முதலாளி ஹெல்வின் யாவ்-ஐ அழைத்திருந்தார். அதற்கு அவரும் வருவதாக ஒப்புக் கொண்டார். இன்றைய தினம் தனது திருமணத்திற்கு வருகை தரும் தனது முதலாளியை கவரவிக்க நினைத்த மாரிமுத்து ஊர் எல்லையில் இருந்து செண்டை மேளம் முழங்க தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் சாரட் குதிரை வண்டியில் தனது உறவினர்கள் புடைசூழ ஊர் வளமாக அழைத்து வந்தார்.

தொழிலாளியின் வரவேற்பில் மனம் மகிழ்ந்த தொழிலதிபர் திருமணம் முடியும் வரை உடன் இருந்து பின்பு மக்களோடு மக்களாக பந்தியில் அமர்ந்து திருமண விருந்தில் கலந்துகொண்டார். பின்னர் திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களோடு சேர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பிறகு நன்றாக படிக்கக்கூடிய மாணவ, மாணவியர்களுக்கு காமராசரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

மேலும் அந்த பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.50,000,00-ஐ நன்கொடையாக வழங்கினார். பின்னர் ஊருக்கு புறப்படும் முன் தன் நட்டு வைத்த மரக்கன்று மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் தனது செல்போனில் செல்பி எடுத்து கொண்டு சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டார். தனது திருமணத்திற்காக வந்த தனது முதலாளி தனக்காக வந்ததோடு மட்டும் மல்லாது தான் படித்த பள்ளிக்கு நிதி உதவி செய்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பெருமிதம் கொண்டார்.

செய்தியாளர் : ரியாஸ் - புதுக்கோட்டை

First published:

Tags: Local News, Pudukkottai