Home /News /pudukkottai /

பொன்னமராவதி அருகே கோயில் திருவிழாவில் ஆபாச நடனம்.. பொதுமக்கள் முகம் சுழிப்பு

பொன்னமராவதி அருகே கோயில் திருவிழாவில் ஆபாச நடனம்.. பொதுமக்கள் முகம் சுழிப்பு

முகம் சுழிக்க வைக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சி

முகம் சுழிக்க வைக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சி

Pudukkottai | ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளோ நடனங்களோ இருக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அதனை பின்பற்றாமல் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கோயில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கொட்டும் மழையில் நடனக் கலைஞர்கள் ஆபாசமாக நடனமாடியது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளோ நடனங்களோ இருக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நிபந்தனைகளை மீறி ஆபாசமான வார்த்தைகள் ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மேலசிவபுரி விநாயகர் கோயில் திருவிழாவை முன்னிட்டு அந்தப் பகுதியில் நேற்று ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடன கலைஞர்கள் ஆபாசமாக நடனம் ஆடினர்.‌ அதுமட்டுமின்றி ஆண் நடன கலைஞர்கள் மேல் சட்டை இல்லாமல் பெண் நடன கலைஞரோடு இணைந்து மிக ஆபாசமாக நடனமாடியது அங்கு கூடியிருந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட காண்போரை முகம் சுழிக்க வைத்தது.

    மேலும் காவல்துறையினர் முன்னிலையில் ஆடல் பாடல் நடன கலைஞர்கள் ஆபாச நடனத்தை அரங்கேற்றிய நிலையில் நிகழ்ச்சியின் போது மழை பெய்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் நடனக் கலைஞர்கள் தங்களது ஆபாச நடனத்தை தொடர்ந்த நிலையில் கூடியிருந்த பார்வையாளர்கள் மழையில் மேடையில் ஏறி ஆடத் தொடங்கினர். பின்னர் ஆடல் பாடல் நிகழ்ச்சி மழையின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போலீசார் அங்கே கூடியிருந்தவர்களை கலைந்து போக செய்தனர்.

    Also see...பார் உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல்!

    திருவிழா காலங்களில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த கலைஞர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச‌ நடனத்தில் ஈடுபடும் இது போன்ற கலைஞர்களால் ஒட்டுமொத்த கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இனி வரக்கூடிய காலங்களில் இது போன்று நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    செய்தியாளர்: ர.ரியாஸ், புதுக்கோட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dance, Pudukottai

    அடுத்த செய்தி